Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு … தேவ பக்தியால் மனநிம்மதி கூடும் …திருப்பங்கள் உண்டாகும் நாள் …!!

கன்னி ராசி அன்பர்களே …! இன்று தீவிர தேவ பக்தியால் மனநிம்மதி கூடும்.  புத்திர பாக்கியம் ஏற்படும்.  திருவருளாலும்  குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை நீங்கள் சந்திக்க கூடும்.  புனிதப் பயணங்கள் மேற்கொள்ளலாமா  என்ற சிந்தனை மேலோங்கும்.  தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பண வரவுக்கு குறைவிருக்காது.  தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகப் பணிகளை கவனிப்பது நல்லது.

வீண் அலைச்சலும் , கூடுதல் உழைப்பும் இருக்கும்.  குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம்.  வாழ்க்கைத் துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும்.  இன்று எந்த ஒரு விஷயமும் சிறப்பாகவே நடக்கும் கவலை வேண்டாம். காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.  அதாவது அடுத்தவர் பேச்சைக் கேட்டு எந்த ஒரு விஷயத்திலும் இறங்காமல் இருப்பது மட்டும் போதுமானதாக இருக்கும்.

அடுத்தவரிடம் எந்தவிதமான பொறுப்புகளையும் ஒப்படைக்காமல் இருப்பதும் ரொம்ப நன்றாகவே இருக்கும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.  அதுமட்டுமல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை கொடுப்பதை எப்பொழுதும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

அதிசயமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் மற்றும் வெளிர் பச்சை நிறம்

Categories

Tech |