கன்னி ராசி அன்பர்களே.! இன்று தன வரவு உண்டாகும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஆராய்ச்சியால் சாத்திர ஆராய்ச்சியால் தேர்ச்சி ஏற்படும். பெரியவர்கள் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே மறைமுக மனவருத்தங்கள் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்கள் செல்ல நேரலாம். இன்று மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்