கன்னி ராசி அன்பர்களே..! இன்று புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். சேமிப்பு கூடும், கொடுக்கல்-வாங்கலில் கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாமல் போகும். கொடுக்கல் வாங்கலில் வீண் விரயமும், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது சூழ்நிலைகளும் அமையும்.
கூடுமானவரை இன்று யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். பணக்கடன் யாரிடமும் தயவுசெய்து வாங்க வேண்டாம். இருப்பதைக் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் இன்று நிர்வாகம் செய்வது ரொம்ப சிறப்பு. ஆன்மீக எண்ணம் கொஞ்சம் இருக்கும். ஆன்மிக எண்ணத்தோடு நின்று காரியங்களை செய்வது ரொம்ப நல்லது. கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செல்லும் மனம் மகிழ்ச்சியை கொடுக்கும் பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழலும் இன்று அமையும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுகமாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மட்டும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்