கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறையால் அனைவரையும் கவர்வீர்கள். சந்தோஷ முகத்துடன் காணப்படுவார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உங்களுக்கு இருக்கும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சியில் புதிய அனுபவத்தை கொடுக்கும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப விவகாரத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். அனைத்து விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும்.
இன்று எதிர் பாலினரிடம் நன்மைகள் ஏற்படும். வீண் செலவு அவ்வப்போது வந்து செல்லும். அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். மாணவர்கள் தேர்வு முடியும் வரை பாடங்களைப் படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். தயவுசெய்து தேர்வு முடியும் வரை விளையாட்டை ஓரங்கட்டி விட்டு பாடத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. எப்பொழுதும் உங்களுக்கு வெற்றி தான் கவலை வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அது சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும் ,சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் இருப்பது நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்