Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…புதிய பாதை புலப்படும்…வியாபாரத்தில் இடர்பாடுகளை சந்திக்க கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய மனம் ரொம்ப மகிழ்ச்சியாகவே காணப்படும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று எல்லா வகையிலும் உங்களுக்கு நல்ல பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்ப்பாடுகளை சந்திக்க கூடும், கவலை வேண்டாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

அனைவரையும் அனுசரித்து மட்டும் செல்லுங்கள் அது போதும் கடன் கொடுக்கும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும் வாகன வசதி இருக்கும் அடுத்தவரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது மட்டும் நல்லது நீண்டதூர தகவல்கள் நல்லதாகவே இருக்கும் எதிலும் நிதானம் தேவை புதிய ஆர்டர் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் தான் வந்து சேரும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் நேரம் கடந்து உழைத்து சில பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழல் வரலாம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

கணவன் மனைவிக்கு இடையே திருப்தியான உறவு காணப்படும் உடல் ஆரோக்கியத்திலும் மகிழ்ச்சியான சூழலை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |