Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு … பெற்றோர் மீதான பாசம் அதிகரிக்கும் … தெய்வ வழிபாடு நல்லது ..!!

கன்னி ராசி அன்பர்களே …! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும்.  புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்வீர்கள். பெற்றோர் மீதான பாசம் அதிகரிக்கும்.  வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.  தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாளாக இருக்கும்.  விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக  கையாள்வது ரொம்ப நல்லது.  தொழில் கூட்டாளிகளை மாற்றும் சிந்தனை மேலோங்கும்.

குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும்.  மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள்.  சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம்.  கொடுக்கல்-வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும்.  எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்.  நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.  அதுமட்டுமல்லாமல் இல்லத்தில் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்

 அதிர்ஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |