Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு … பேசும் வார்த்தையில் கவனம் தேவை …நண்பரால் ஆதாயம் அடைவீர்கள் …!!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று அடுத்தவர் விஷயத்தில் தயவு செய்து நீங்கள் கருத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம்.  அவர்களுக்கு நீங்கள் பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம்.  குடும்பத்தின்  தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராகும்.  எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.  நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும்.  எடுத்த காரியத்தில் அனுகூலமும் கிடைக்கும்.  உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.  கடின உழைப்பால் வளர்ச்சி அடையக்கூடும்.

பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மையை கொடுக்கும்.  எதை பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது.  கோபம் அவ்வப்போது வந்து செல்லும் பொறுமையாக இருங்கள்.  மனதை நிம்மதியாக வைத்துக்கொள்ளுங்கள்.  கூடுமானவரை தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.  இல்லையேல் இசை பாடல் ரசிப்பது ரொம்ப நல்லது.  இன்று பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகத்தான் நடந்துகொள்ளவேண்டும்.

பிள்ளைகளின் சேட்டைகள் கொஞ்சம் அதிகரித்தாலும் பெற்றோர்கள் கொஞ்சம் கவனமாகவும் கூடுமானவரை நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |