கன்னி ராசி அன்பர்களே..! எதிரும், புதிருமாக இருந்த கணவன்-மனைவிக்குள் இருந்த அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும். நல்ல மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோக முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பாராத விதத்தில் வரவுகள் வந்து சேரும். இன்று வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். சோதனையான காலங்கள் மாறும் எனவே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது எப்பொழுதுமே உங்களுக்கு நல்லது. பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும்.
எதிலும் முன்னேற்றம் இருக்கும் கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்புடன் இல்லாதது போல் இருப்பார்கள், கவலை வேண்டாம் அவர்கள் சரியான முறையில் செல்வார்கள். அதேபோல் மாணவர்கள் தேர்தல் முடியும் வரை கொஞ்சம் மனக்கட்டுப்பாட்டுடன் இருங்கள், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், தெளிவான சிந்தனையுடன் பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் கருப்பு நீலம் மற்றும் மஞ்சள் நிறம்