Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும்.. போட்டிகள் விலகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாளாகவே இருக்கும். புனித பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவிகளும் கிடைக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும், அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

நட்பு மத்தியில் பாராட்டப்படுவீர்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும், கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று படித்ததை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பு. அதுமட்டுமில்லை தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும். மாணவர்கள் காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு மனம் அமைதியாகவே காணப்படும். கல்வியில் சிறந்து விளங்க முடியும்.

கூடுமானவரை இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களைப் படியுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீலநிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |