கன்னி ராசி அன்பர்களே..! இன்று தயவுசெய்து உங்களுடைய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். துன்பம் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தெய்வீகத்தன்மை ஏற்படும். கூடுதல் பணிகளால் தொழில் வியாபாரம் நடைமுறை சீராகும். பணவரவை தயவுசெய்து சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் செலவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் பொறுத்தவரை தயவுசெய்து இரவில் கொடுக்கல்-வாங்கல் வேண்டாம். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை செய்ய நினைக்கும் காரியங்களை சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது.
எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற கொஞ்சம் கடுமையான சூழல் தான் இருக்கும். தொழிலாளர்களால் வீண் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். மற்றவர்களிடம் கொஞ்சம் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். உங்களுடைய சிந்தனை திறன் இன்று கூடும். ஆனால் இன்று கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் ரொம்ப கவனமாக இருங்கள்.. முக்கியமாக சளி போன்ற பிரச்சினைகளால் உங்களுக்கு தொந்தரவு வரக்கூடும். ஆகையால் இருமல் சளி பிரச்சினையை சரி செய்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப நல்லது.இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனால் கர்ம தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்