Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. விவகாரங்களில் தலையிடாதீர்கள்.. நட்பு பகையாக கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று அமைதி கூட  ஆலயம் சென்று வழிபட வேண்டிய நாளாகவே இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பயணத்தின் பொழுது கூடுதல் கவனம் தேவை. நட்பு பகையாக கூடும். வீண் விரயம் உண்டாகும். உறவினரின் பேச்சு தொந்தரவாக கருதுவீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழிகளை சிந்திப்பீர்கள். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவேண்டும்.

கூடுமானவரை பொறுமையுடனும், நிதானத்துடனும் இருங்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வருவது ரொம்ப சிறப்பை கொடுக்கும். தியானம் போன்றவைகளில் ஈடுபடுவது மனம் அமைதி பெறுவதற்கு உதவும். இன்று மாணவச் செல்வங்களுக்கு பொறுமையாக இருந்து ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கொண்டு, அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |