கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்படும்.பழைய கடனைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும் உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். இன்று வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடும் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும் தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கூடும்.
குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்து செல்லும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பேசும் போது நிதானத்தை கடைபிடியுங்கள் வாக்குவாதமும் செய்யாதீர்கள். உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும் இருந்தாலும் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோலவே சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள் ஏற்படும் நினைத்தது நடக்கும் ஆசிரியரின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு மற்றும் வெளிர் நீலம் நிறம்