கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டியூர் காப்புக்காடு வன எல்லையை ஒட்டி நடேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் நடேசன் ஒரு மரத்தில் கன்று குட்டியை கட்டி விட்டு தோட்ட வேலைகளை பார்ப்பதற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கன்று குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து நடேசன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கால் தடயத்தை ஆய்வு செய்தபோது கன்று குட்டியை சிறுத்தை அடித்துக் கொன்றது உறுதியானது. இதனால் வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர். மேலும் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.