Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“9 வகையான மூலிகை பொருட்கள்”…. கபசுர குடிநீர் தயாரிக்கும் பணி…. நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி சித்த மருத்துவ மூலிகைகளால் கபசுர குடிநீர் தயாரிக்கும் இடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டையிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் டாம்ப்கால் மருந்து செய்யும் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் தினமும் 450 கிலோ கபசுர குடிநீர் மற்றும் நில வேம்பு கசாயம் செய்யப்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனையடுத்து கொரோனா தொற்று காலங்களில் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சிகிச்சை அதிகரிக்கும் வகையில் கபசுர பொடி மற்றும் நிலவேம்பு கசாயம் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த கபசுர குடிநீர் 9 வகையான சித்த மருத்துவ மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |