Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கபடி போட்டி: சாதனை படைத்த வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கோவை மாவட்டம் அமெச்சூர் கபடி கழகம் சார்பாக திருப்பூரில் மாநில கபடி போட்டியானது நடைபெற்றது. இவற்றில் ஆனைமலை வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அத்துடன் பல மாவட்டங்களிலிருந்து 25 அணிகள் பங்கேற்றது. இதையடுத்து இதில் வி..ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், அப்துல் கலாம் அணியும் இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

அதாவது வி.ஆர்.டி. அரசு மேல்நிலைப் பள்ளி 32 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது. இதனிடையில் சிறந்த விளையாட்டு வீராங்கனை கோப்பையை புவனேஸ்வரி வாங்கினார். சாதனைபடைத்த மாணவிகளை தலைமை ஆசிரியர் பி.நந்தினி, உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Categories

Tech |