Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

கபடி விளையாட்டு, அடி பம்பில் தண்ணீர் அடித்தது…. இப்போ இஸ்திரி போட்டு…. வாக்கு சேகரித்த அமைச்சர்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் அப்பகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இஸ்திரி கடைக்குள் சென்று ஜெயக்குமார் துணிகளை இஸ்திரி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே ஜெயகுமார் கபடி விளையாடுவது, அடி பம்பில் தண்ணீர் அடித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |