வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போரம் கிராமத்தில் அருண்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாறன்(29), பார்த்திபன்(25) என்ற உறவினர்கள் இருக்கின்றனர். அனைவரும் கபடி விளையாடுவதற்காக கிராமத்தில் ஒரு அணி அமைத்து பிற இடங்களுக்கு சென்று விளையாடி வந்தனர். இந்நிலையில் களத்தில் இறங்க அனுமதிக்காமல் மணிமாறனையும், பார்த்திபனையும் மாற்று வீரர்களாக மட்டுமே வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் மணிமாறன் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு அருணை வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணிமாறன் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.