நட்சத்திரம் நகர்கிறது பட இசை வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் கபாலி படம் குறித்து பேசியுள்ளார்.
முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.
நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழிபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு 2ஆம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித் கபாலி திரைப்படத்தின் மூலம் தனக்கு மனவுளைச்சல் ஏற்பட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஜெய் பீம் என்கின்ற ஒரு வார்த்தை தான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததாகவும் “அட்டகத்தி” துவங்கி “நட்சத்திரம் வருகிறது” வரை தன்னை அழைத்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
கபாலி திரைப்படத்தை இயக்கிய பொழுது எனக்கு தயாரிப்பாளர் தாணு முழு சுதந்திரம் தந்தார். கபாலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அவருக்கு பிடிக்கவில்லை. எனினும் எனக்காக அதை ஒப்புக் கொண்டார். இத்திரைப்படம் வெளியாகி ஹிட் படம் என்று சொன்னாலும் இண்டஸ்ட்ரியல் பெரிதாக பேசப்படவில்லை என்பதுதான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானது. அப்பொழுது கலைபுலி தாணு தன்னை அழைத்து படத்தின் வசூல் விவரங்கள் பற்றி தன்னிடம் பேசி என்னை ஊக்கப்படுத்தினார் என கூறியுள்ளார்.