ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமா ஈஸ்வரர் கோவிலும் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த மூன்று கோவில்களையும் சேர்த்து பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் சுமார் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஈரோடு சரக ஆய்வாளர் தினேஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் சாமிநாதன் ஆகியோரது முன்னிலையில் 18 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் மூன்று கோவில்களின் மொத்த உண்டியலிலும் ₹8,49,651 பணமும் 10 1/2 கிராம் தங்கமும் 511 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கோசாலையில் இருக்கும் உண்டியலில் ரூபாய் 40 ஆயிரத்து 564 ரூபாய் இருந்தது. இந்த பணியில் பக்தர்களும் தன்னார்வலர்களும் பங்கு கொண்டனர்.