Categories
விளையாட்டு

கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்….. வீடு தேடிவந்த பரிசு….!!!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின். இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அவர் பேட்டிங்கில் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 6 விக்கெட் கைப்பற்றியதன் வாயிலாக சென்னையை சேர்ந்த அஸ்வின் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்தார். அதாவது கபில் தேவ் மொத்தம் 434 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். ஆனால் அஸ்வின் 436 விக்கெட்டுகளை தட்டி தூக்கி அவரை தாண்டி இந்திய வீரர்களில் தற்போது 2-ஆம் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் அஸ்வினை பாராட்டும் வகையில் அவருடைய வீட்டிற்கு கபில்தேவ் ஒரு பூங்கொத்தை அனுப்பியுள்ளார்.

இது குறித்து அஸ்வின் அளித்த வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது, கபில்தேவின் சாதனையை முறியடித்தது கனவு போல இருக்கிறது. இவ்வளவு விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என நான் நினைத்ததே இல்லை. தற்போது கபில்தேவ் என்னுடைய வீட்டிற்கு பூங்கொத்து மற்றும் வாழ்த்து கடிதம் அனுப்பியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதனிடையில் நிருபர்கள் சந்திப்பின்போது கேப்டன் ரோகித் சர்மா என்னை மிகவும் பாராட்டினார். மேலும் ஒருநாள் அவர் என்னை அழைத்து பேசியபோது, “அணியின் கூட்டங்களில் நீ நன்கு பேசுவதற்காக பாராட்டுகிறேன்” என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் அணிக்கு தேர்வாகி விட்டால் ஆடுகளத்தில் அடிப்படை விசயங்களை ஒழுங்காக செய்ய சிரமப்படக் கூடாது எனவும் கூறினார். இது தனக்கான பாதையை திறந்துவிட்டது என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Categories

Tech |