214 தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்டதால்சாண்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளன.
பிரேசிலியாவில் 214 தொழிலாளர்கள் மற்றும் கப்பலில் பயணம் செய்த பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சான்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி அன்விசா கூறியுள்ளார். சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலிக்கு இடையே கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கப்பல்கள் தலா 3,000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரியோ டி ஜெனிரோ மற்றும் சாண்டோஸுக்கு சென்று கொண்டிருந்தன. அப்போது சாண்டோஸுக்கு சென்ற கப்பலில் இருந்த பணியாளர்கள் 65 பேருக்கும், பயணிகள் 25 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டு அதில் இருந்த பயணிகள் தனிமைப்படுத்தப் பட்டனர்.