எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் சிக்கி உள்ள பிரம்மாண்ட சரக்கு கப்பலை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூய்ஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்த பாதையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் சிக்கிக்கொண்டது. தற்போது வரை அந்த கப்பலை மீட்க முடியவில்லை. அதனால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் முக்கிய புள்ளி விவரங்கள் அடங்கியுள்ளன. அதனால் கடல்வழி பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 2,900கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட புழுதிப் புயலால் சிக்கி நின்ற சரக்கு கப்பலை மீட்க முடியாமல் கப்பல் ஊழியர்கள் திணறி வருகிறார்கள். அதனால் அதனைத் தொடர்ந்து வந்த 150 கப்பல்கள் வரிசையில் காத்து நிற்கின்றன. இந்நிலையில் கச்சா எண்ணெயின் விலை 4 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை கடும் உயர்வு இருக்கும் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சரக்கு கப்பலை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து புயல் வீசுவதால் கடுமையான காற்று மழை பெறும் நிலைமையை சிக்கலாக்குவதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் பல்வேறு இடங்களில் காத்திருக்கின்றன.