எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
லடாக் எல்லையில் சீனாவுடன் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழலில் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா பல்வேறு ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்து வருகிறது. அதில் தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ், ப்ரித்திவி 2, ருத்ரா 1, சௌரியாநக் உள்ளிட்ட ஏவுகணைகளும் அடங்கும். இந்நிலையில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பலான INS பெர்ப்பலில் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை செலுத்தி இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளது.
அந்த ஏவுகணை கடலில் இன்னொரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய கப்பலை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது. இதன் மூலம் இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.