Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கப்பூர் கிராமத்தில்… சிவன் கோவிலில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு…!!!

கப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கப்பூர் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சோழர் கால கல்வெட்டை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் த.ரமேஷ், விழுப்புரம் கணிப் பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, கப்பூர் ஊரின் வடக்கே செய்தருளி ஈஸ்வரர் என்னும் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவில் கருவறையின் தென்கிழக்குப் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி ஆண்டான கி.பி.1,072 -ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் இந்த ஊர் கப்பூர் என்றும், இங்கு இருக்கின்ற இறைவனை செய்தருளு நாயனார் என்றும்  அழைக்கப்பட்டுருந்தது. மேலும் இந்த கோவிலில் சந்தி விளக்கு எரிப்பதற்கு மூன்று பசுகளை தானமாகக் கொடுக்கப்பட்டது. அந்த பசுக்களை இக்கோவிலையை நிர்வகித்த நேராபிராணன் என்பவருக்கு கொடுக்கபட்டதாக இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மேலும் இதிலிருந்து இந்த ஊர் சோழர் காலத்திலிருந்து கப்பூர் என்று வழங்கப்பட்டதை அறியலாம். இந்த கோவிலில் இரண்டு விஷ்ணு சிற்பங்களும், ஒரு விநாயகர் சிற்பமும், மீசையுடன் கூடிய லகுலீசர் சிற்பமும் பல்லவர் கால வரலாற்றில் சிறந்தது. இந்த சிவன் கோயில் பல்லவர் காலத்தில் இருந்தது. அதன் பின் சோழர் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது. இந்த கோவிலில் அதிட்டானம் மட்டும் கருங்கல்லை கொண்டு கட்டப்பட்டது. மற்றவைகள் எல்லாம் செங்கலை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த கோயிலை இந்து சமய அறநிலையத் துறையினர் பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |