புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “காங்கிரஸ் கட்சியால் ஏழு தமிழர் மட்டும் விடுதலை செய்யப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. இதனால் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்காக சட்டத்தை இயற்றினால் அது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும்.
மேலும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் எனக்கு தாய்மாமன் முறை ஆவார். இந்நிலையில் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சமூக ஆர்வலராக, சமுதாய குரலாக ஒலித்தால் மட்டுமே இவரால் தமிழகத்துக்கு ஏதேனும் முன்னேற்றத்தை கொண்டுஇயலும். இதைவிடுத்து அவரால் அரசியலில் நின்று வெற்றி பெற இயலாது” என்று கூறினார்.