கமல் செய்த காரியத்தால் சூர்யா பீல் பண்ணி கண் கலங்கியதாக பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது.
இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்தது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்தது.
விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல், லோகேஷ் கனகராஜுக்கு காரும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கு பைக்குகளையும் கமல்ஹாசன் பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் வாட்ச் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, பரிசளித்தது புது வாட்ச் அல்ல. அவர் பல வருடங்களாக பயன்படுத்தி வந்தது. அவர் வாங்கிய முதல் காஸ்ட்லி வாட்ச் அதுதான். மேலும் அது அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எவ்வளவு முக்கியமானது என்பது சூர்யா சாருக்கு தெரியும். அதனால் அவர் அதை பரிசாக அளித்த பொழுது சூர்யா சார் கண் கலங்கிவிட்டார் எனக் கூறியுள்ளார்.