Categories
தேசிய செய்திகள்

கமலா பூஜாரி மருத்துவமனையில் நடனமாட கட்டாயப்படுத்தப்பட்டாரா?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவும் நெல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பயிர்களை நாட்டு விதைகளை பாதுகாப்பதற்காகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு கமலா பூஜாரி பத்மஸ்ரீ விருது பெற்றார். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கமலா பூஜாரியின் உடல்நிலையே அறிய ஆட்சியர் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து கேட்டறிந்தார். இந்நிலையில் கமலா பூஜாரியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டார். அப்போது அவரை பார்க்க வந்த சமூக சேவகர் மம்தா பெஹரா வயதானவர் என்று பாராமல் நடனமாடுமாறு வற்புறுத்தி உள்ளார். தொடர்வற்புறுத்தலையடுத்து அவரும் நடமாடி உள்ளார். அவருடன் மம்தாவும் நடமாடியுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து கமலா பூஜாரி கோராபுட் மாவட்டத்தில் உள்ள தொலைக்காட்சி சேனலில் கூறியது, நான் ஒருபோதும் நடனமாட விரும்பவில்லை. ஆனால் அதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பலமுறை மறுத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அப்போது நான் உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருந்ததாக கூறினேன் என்று கூறினார். இதனையடுத்து கமலா பூஜாரி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் ஆகுவதற்கு முன்பு நடனமாட வற்புறுத்திய சமூக சேவகர் மம்தா பெஹரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒடிசாவில் உள்ள பராஜா சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால் பராஜா பழங்குடியினர் சமூகத்தினருடன் போராட்டம் நடத்துவோம் என்று பழங்குடியினர் சமூக சங்கமான பராஜா சமாஜாவின் தலைவர் ஹரிஷ் முதலி கூறினார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையின் பதிவாளர் டாக்டர் அபினேஷ் ரெளத் கூறியது, பூஜாரி சிறப்பு அறையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பூஜாரியை நடனமாட செய்ததாக கூறப்படும் பெண் சிறப்பு அறைக்கு அவரை பார்க்க வந்ததார். கமலா பூஜாரியுடன் பல செல்பிகளை எடுத்த பஹராவை தனக்குத் தெரியாது என்று பூஜாரியின் உதவியாளர் ரஜீப் ஹியால் கூறினார். அதனைத் தொடர்ந்து பெஹரா இது குறித்து கூறியது, இந்த செயலுக்கு பின்னால் தனக்கு எந்த கெட்டணமும் இல்லை . பூஜாரியின் சோம்பலை தவிர்க்க விரும்பியே நடனமாட கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |