Categories
மாநில செய்திகள்

கமலா ஹரிஷுடன் விருது…! செம மாஸ் காட்டிய தமிழிசை… புகழ்ந்து தள்ளும் தமிழ் சமூகம் ..!!

சர்வதேச மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு அளிக்கப்பட்ட விருதினை  புதுச்சேரியின் பெண் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பல்வேறு இன நடவடிக்கை குழு என்ற அமைப்பு சர்வதேச மகளிர் தினத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பெண்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான விருதினை அறிவித்திருந்தது. இந்த விருதிற்கு அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹரிஸும், புதுச்சேரி மற்றும்  தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த விழாவிற்கு புதுச்சேரியில் இருந்தே தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டுள்ளார். மேலும் பெண்களின் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை பெற்றுக்கொண்ட  தமிழிசை சவுந்தர்ராஜன் “குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும், உழைக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |