கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இந்த நிலையில் இதனை அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகின்றார். இந்த படம் விபத்து கொரோனா போன்று காரணங்களால் பல வருடங்களாக முடங்கி இருந்தது. இதனை அடுத்து படத்தை கைவிட்டு விட்டதாக இணையதளங்களில் பரவிய தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்துள்ளனர். தற்போது படத்தின் இயக்குனர் சங்கர் தெலுங்கு ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். அந்த படத்தை முடித்துவிட்டு இந்தியன் 2 படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்த காஜல் அகர்வால் படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட முடிவு செய்திருக்கின்றனர். காஜல் அகர்வாலுக்கு பதிலாக கமல்ஹாசன் ஜோடியாக நடித்த இந்திய நடிகை தீபிகா படுகோனேவிடம் வடக்குழுவினர் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தீபிகா படுகோனே ஏற்கனவே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்திருக்கின்றார். தீபிகா படுகோனே இந்த படத்தில் நடிக்க மறுத்தால் இந்தி நடிகை கேத்ரினா கைப்பை அழைக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.