உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் நடித்த தயாரித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே சமூக வரவேற்பினை பெற்று வசூல் சாதனையை படைத்தது. கமல் படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆனதாலும் அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என கமல் பிஸியானதாலும் இனி அவர் படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்களுக்கு இருந்தது.
மேலும் சிலர் அவரை விமர்சனம் செய்தும் வந்தனர் இதற்கெல்லாம் கமல் விக்ரம் படத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் என தான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் கமல் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் லோகேஷின் இயக்கத்தில் ஒரு படம் என கமல் நடித்திருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கும் அமைப்பில் கமல் இருந்து வருகின்றார். சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2018 ஆம் வருடம் துவங்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சினைகளால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கமல் அரசியலில் பிஸியாக ஷங்கர்தெலுங்கு படம் இயக்க சென்றுள்ளார். அதனால் இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக பல வதந்திகள் பரவி வந்தது. இந்த சூழலில் விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்டிங்கில் கமல் மீண்டும் இந்தியன் 2 துவங்கும் என உறுதியளித்துள்ளார். அதன்படி இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது வந்த தகவலின் படி இந்தியன் 2 படத்தில் பிரபல நடிகரான கார்த்திக் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 80 மற்றும் 90 களில் கமலுக்கு இணையான ரசிகர்களைக் கொண்ட நாயகனாக வலம் வந்த கார்த்திக் தற்போது இந்தியன் படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த செய்தி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.