Categories
அரசியல் மாநில செய்திகள்

கமலின் சொத்துமதிப்பு ரூ.176 கோடி…. கடன் ரூ.50 கோடி…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதையடுத்து வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்கள்  மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 176 கோடியே 99 லட்சம் ரூபாய் சொத்துக்கள் உள்ளன. 50 கோடி ரூபாய்க்கு கடனும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |