கமலின் முன்னாள் மனைவியான சரிகா தாகூர் பற்றிதான் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவரின் முன்னாள் மனைவி சரிகா தாகூர். இவர் My Beautiful Wrinkles என்ற தொடரில் நடிக்கிறார். இத்தொடரில் சரிதாவுக்கு பேத்தி இருக்கும் நிலையில் தன்னை விட 30 வயது சிறிய நபரின் மீது ஈர்ப்பு ஏற்படுவது போன்ற கதை அது.
இதனால் 60 வயதில் 30 வயது நபரை காதலிப்பது என ஒருபக்கம் விமர்சனம் செய்ய மற்றொரு பக்கம் 60, 70 வயது ஹீரோ இருபத்தைந்து, முப்பது வயது ஹீரோயினுடன் டூயட் பாடும்போது நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள்..? இது என்ன நியாயம்? என மற்றொரு பக்கம் கேள்வி கேட்டு வருகின்றனர். இவரின் தொடர் குறித்து தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது.