விக்ரம் திரைப்படத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அண்மையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் படத்தை பற்றி கூறியுள்ளதாவது, லோகேஷ் கனகராஜின் மாநகரம் மற்றும் கைதி திரைப்படங்கள் முழுக்க முழுக்க அவர் பாணியில் இருந்தது போலவே கமலின் விக்ரம் திரைப்படமும் இவரின் பாணியிலேயே முழுமையாக இருக்குமாம். கமல் எந்த வேடத்தில் நடித்தாலும் அதில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து விடுவார். எனவே இந்த படத்திற்காக கமல் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளாராம். அதனால் இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.