கமலின் வீடியோவை வைத்து விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள்.
கமலின் வீடியோவை வைத்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பார்த்த இணையதளவாசிகள் அவரை விளாசி வருகின்றார்கள். ப்ளூ சட்டை மாறன் கமலின் வீடியோவை ஷேர் செய்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கஷ்டப்பட்டு உழைத்து ரசிகர்களுக்கு மொக்கை படம் தருவதை விட இஷ்டப்பட்டு வேலை செய்து நல்ல படம் தாருங்கள். இது வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டேன்.
24 ஹார்ஸ் தூங்கவில்லை என்று அனுதாபம் தேடும் அறிவுஜீவிகளுக்கு சிறப்பாக பொருந்தும். பிராக்டிகல் அண்ட் பிராங்க் ஸ்டேட்மென்ட் பை கமல் என குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் கமலின் பழைய வீடியோக்களை பகிர்ந்து விளாசி வருகின்றார்கள்.