விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாக நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவர் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .