Categories
சினிமா தமிழ் சினிமா

கமலுடன் விக்ரம் படத்தில் இணைந்த… காளிதாஸ் ஜெயராம்…!!!

நடிகர் கமல்ஹாசனும் நடிகர் ஜெயராமும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். தமிழில் தெனாலி, பஞ்சதந்திரம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஒருபக்க கதை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். தற்போது காளிதாஸ் பல படங்களில் இவர் நடித்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இந்த படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கமலுடன் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். கமலுக்கு மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் கமல் பார்வையற்றவராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

Categories

Tech |