இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கமலை சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.
விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல், லோகேஷ் கனகராஜுக்கு காரும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கு பைக்குகளையும் பரிசாக வழங்கினார். நேற்று விக்ரம் படத்தின் வெற்றி விழாவானது கிண்டியில் நடைபெற்றது. இதில் கமல், லோகேஷ், அனிருத், உதயநிதி ஸ்டாலின் என பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிகுமார் கமலை சந்தித்து இருக்கிறார். கமலிடம் ரவிக்குமாரை இயக்குனர் லோகேஷ் அறிமுகம் செய்திருக்கிறார். கமல்ஹாசனின் தீவிர ரசிகர் இயக்குனர் ரவிக்குமார். இதனால் கமலை சந்தித்த தருணத்தை நெகிழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரவிக்குமார். ரவிக்குமார் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார் குறிப்பிடத்தக்கது.