Categories
அரசியல்

கமலை வைத்து காய் நகர்த்தும் காங்கிரஸ்… கடுப்பில் திமுக…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சியை காங்கிரஸ் கட்சி தங்களுடன் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி காங்கிரஸ் கட்சி தங்களுடன் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளது. கமல்ஹாசன் தங்களது கூட்டணியில் இணைய விரும்பினால் கட்டாயம் வரவேற்பும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். புதுச்சேரியில் திமுக தனித்து ஆட்சி என்ற பிரச்சாரத்தை செய்ததற்கு பதிலடியாக காங்கிரஸ் கமலை அழைத்துள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |