மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு. கமல்நாத்தின் நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது முன்னாள் முதலமைச்சர் திரு. கமல்நாத் பாஜக-வை சேர்ந்த பெண் அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்தார். இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில் அவரது நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து திரு. கமல்நாத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி திரு. பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.