Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டீசர் செய்த தெறி மாஸ் சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

விக்ரம் தி பர்ஸ்ட் கிளான்ஸ் வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் கமல் ஹாசன். இவர் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று விக்ரம் தி பர்ஸ்ட் கிளான்ஸ் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் மாஸ் சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |