கமல்ஹாசன், சூர்யா இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் சில ஹீரோக்கள் இமேஜ் பார்க்காமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன், சூர்யா இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமல் நீரத் அளித்த பேட்டியில் ‘கமல்ஹாசன், சூர்யா இருவரையும் மனதில் வைத்து ஒரு புதிய திரைக்கதையை எழுதியிருக்கிறேன். இதனை அவர்கள் இருவரிடமும் தெரிவித்துவிட்டேன் .
அவர்களும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டனர். தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடக்கின்றன’ என கூறியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.