Categories
சினிமா

கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படம்…. யூடியூப்பில் முதலிடத்தில் உள்ள பாடல்…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

பிரபல நடிகர் கமல்ஹாசன் நடித்து இருக்கும் விக்ரம் என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க கமல்ஹாசன்எழுதி பாடி இருக்கும் பத்தலே,பத்தலே எனும் பாடலானது சென்ற 11 ஆம் தேதி இரவு வெளியாகியது. இப்பாடலில் மத்திய அரசை விமர்சித்து வரிகள் இருப்பதாகவும், சாதி ரீதியான பிரச்சினைகளை தூண்டும் அடிப்படையில் வரிகள் இடம் பெற்றுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
இருப்பினும் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்போது இந்த பாடல் இரண்டே நாளில் 2 கோடி பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த பாடல் வெளியானதில் இருந்து இப்போது வரை யூடியூப்பில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

Categories

Tech |