இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான ஆடுகளம், வட சென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இவர் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் .
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2, விக்ரம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். விரைவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் இணையும் படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.