மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துபேசினார். சென்னை மாநகரம் ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இச்சந்திப்பின் போது கமல்ஹாசன், ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவருடன் விக்ரம் படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடன் இருந்தார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் திரைக்கு வந்துள்ள விக்ரம் படம் 10 நாட்களுக்குள் உலகம் முழுதும் ரூபாய் 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் விக்ரம் படத்தை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்துள்ளார். இதில் விக்ரம் திரைப்படத்தின் பெரும் வெற்றியை அடுத்து இனிய நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நிகழ்ந்தது. பின் மனமும் நெகிழ்ந்தது என கமல்ஹாசன் தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.