Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் இப்படி கூறினாரா…? சசிகுமாருடன் இணைந்த இசையமைப்பாளர்… திரைப்பட விழாவில் பேச்சு…!!

இசையமைப்பாளர் ஜிப்ரான் படவிழாவில் தமிழை வாழ வைப்பது புலம் பெயர்ந்தவர்கள் தான் என்று கமல் கூறியதாக தெரிவித்துள்ளார்.

வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான், ராட்சசன் படத்திற்காக அதிக பாராட்டுக்களை பெற்றிருந்தார். மெல்லிசைப் பாடல்களில் இதயத்தின் உணர்வுகளை தூண்டும் விதமாக இசையமைக்கும் ஜிப்ரானிற்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஜிப்ரான், நடிகர் சசிகுமார், வாணி போஜன், பிந்துமாதவி, நாசர், நிஸ்நஸம், சதீஷ், பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து அனீஸ் இயக்கத்தில் உருவாகும் பகைவனுக்கும் அருள்வாய் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் விழா நிகழ்ச்சியில் பேசிய அவர் “கமல் சாருடன் கம்போசிங் செய்யும்போது புலம்பெயர்ந்தவர்கள் தான் தமிழை அதிகம் வாழ வைக்கிறார்கள் என்று கமல் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசனின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் போன்ற படங்களில் ஜிப்ரான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |