Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் “வேட்டையாடு விளையாடு 2″… படத்தின் கதை இதுதான்… வெளியான தகவல்..!!!!!!

கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் ஒருவரி கதை வெளியாகி உள்ளது.

கமல் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சென்ற 2018-ஆம் வருடமே படபிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் சென்ற சில நாட்களாகவே வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குனர் கௌதம் மேனன் உருவாக்கி வருவதாக தெரிவித்தார். தற்பொழுது இத்திரைப்படத்தின் ஒருவரை கதை பற்றிய தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால், கமல் நடித்த ராகவன் கதாபாத்திரம் ஓய்வு பெற்றிடுவாராம். பின்பு ஒரு முக்கிய புள்ளியின் கொலையை கண்டுபிடிக்க அரசாங்கம் அவரிடம் உதவியை கேட்கின்றது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் ஒருவரி கதை என இணையத்தில் தகவல் பரவி வருகின்றது.

Categories

Tech |