இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்க உள்ளதாக லைகா நிறுவனம் கூறியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியன் 2 திரைப்படம் இயக்கப்பட்டு வந்த நிலையில் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் படம் மீண்டும் தொடங்க உள்ளதாக லைகா நிறுவனம் கூறியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் டான்.
இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் வசூல் 100 கோடியை குவித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது. இவ்விழாவில் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் பங்கேற்றிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, இந்தியன் 2 திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியுள்ளதாவது, இந்தியன் 2 திரைப்படம் விரைவில் துவங்க உள்ளதாக கூறினார். இதை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். இந்த படத்தின் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்று சில பிரச்சனைகளால் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்பொழுது துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.