தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவாஜி நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் கமலை வைத்து தேவர் மகன் இரண்டாம் பாகத்தை எடுக்கின்றார்கள். இந்த படத்தை பகத் பாசில் இயக்க இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் தேவர்மகன்-2 திரைப்படத்தை முகேஷ் நாராயணன் கமலை வைத்து இயக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றது. இந்த நிலையில் தேவர் மகன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தற்பொழுது இப்படம் விரைவில் துவங்க உள்ளதாகவும் திரைப்படத்தின் கமலின் மகனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும் படத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது குறிப்பிடதக்கது.