Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் நாட்டை ஆண்டால் ஒரு குடும்பம் கூட உருப்படாது – தமிழக முதல்வர் காட்டம்

நடிகர் கமல் நாட்டை ஆண்டால் ஒரு குடும்பம் கூட உருப்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரியலூரில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சரிடம் அரசு வழியில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கமல் முன்வைத்துள்ள விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடிபழனிசாமி, சினிமா மூலம் குடும்பங்கள் எடுப்பதே கமலஹாசனின் வேலை என்று காட்டமாக பதில் அளித்தார்.

மேலும், அவரு ரிட்டையடு ஆகி புதிதாக அரசியல் வந்துள்ளார். அவருக்கு என்ன தெரியும் ?  அவரு ஒரு கட்சிக்கு தலைவர் என்று சொல்லி கேள்வி கேட்கிறீர்களே…!  அவர் எல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நல்லா இருக்கிற குடும்பத்தை கெடுக்கிறது தான் அவரோட வேலை. நதி இணைப்பு, விவசாயிகள் பண்ணை திட்டம் என  ஆக்கப்பூர்வமான எத்தனையோ திட்டம் இருக்கு. மாணவர்களுக்கு நல்ல அறிவுரை குடுங்க. புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  அற்புதமான பாடல்களை எல்லாம் அவருடைய படத்தில் நடித்துள்ளார். ஒரு படத்துலையாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாடல் பாடி இருக்கிறாரா? அவர் படத்தை பார்த்தால் அதோடு அந்த குடும்பம் காலி அப்படிப்பட்ட படத்தில்தான் கமல் இருக்கின்றார் என முதல்வர் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |