Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் நினைத்தால் விமானமே வாங்கலாம்… சீமான் கடும் விமர்சனம்…!!!

கமல் நினைத்தால் விமானமே வாங்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக வாசிங்மிஷின் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “ஒவ்வொரு வீட்டுக்கும் வாஷிங் மெஷின் கொடுக்க 15 ஆயிரம் செலவாகும், இரண்டு கோடிக்கும் மேலான குடும்ப அட்டைக்கு வாஷிங்மெஷின் கொடுக்க எங்கிருந்து பணம் பெறுவீர்கள் என சொல்ல வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே 6 லட்சம் கோடி கடன் இருக்கும் போது எப்படி வாசிங்மிஷின் கொடுக்க முடியும். அதிமுக மற்றும் திமுக விற்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

தமிழ் குடிகளே என ஸ்டாலின் கூறுகிறார். அவர் திராவிடர்களே என கூற முடியுமா, எல்லாம் ஏமாற்று வேலை. அந்த கருத்தியல் வேறுபாட்டை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் குறித்து சீமான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வாங்கிய ஊதியமே கமலுக்கு போதும். அவர் நினைத்தால் விமானமே வாங்கலாம் என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |